தமிழ் பண்பலை கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டுவரும் வணிக நோக்கற்ற இணையவழி காற்றலையாகும், தமிழால் தமிழர்க்கு என்ற உயரிய நோக்கோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பண்பலை, உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழருக்காகவும் அவர்தம் பண்பாட்டுச் செழுமைக்காகவும் பல்வேறு பணிகளைச் செய்ய முற்படுகிறது. நீங்கள் இப்பூவுலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களையும் பிறதமிழரோடு இணைத்துக்கொண்டு செல்லவே விரும்புகிறது. இதில் நிகழ்ச்சிகளை தொகுத்தளிக்கவும், உங்கள் நாட்டிற்க்கென சிறப்பு நிகழ்வுகளை நடத்திக்கொள்ளவும் விரும்பினால் நீங்களோ அல்லது நீங்கள் பங்குபெற்றுள்ள சங்கமோ எம்மைத் தொடர்புகொள்ளலாம். ஏற்கனவே, மலேசியா, துபாய், ஐக்கியக்குடியரசு மற்றும் காங்கோ குடியரசு தமிழர்க்காக சிறப்பு நேரங்களை ஒதுக்கி நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

திரைப்பாடல்களை பொருத்தவரை 1941 ஆம் ஆண்டுமுதல் 1992 ஆம் ஆண்டுவரை வெளிவந்த தமிழ்த்திரைப்படங்களிலிருந்து நீங்கள் பாடல்களை விரும்பிக்கேட்கலாம். பழைய பாடல்களை மட்டுமே ஒலிபரப்பும் ஒரு தனித்துவ வானொலி தமிழ் பண்பலை. நேயர் விருப்பம், நேரலை அரட்டை போன்ற தனி பகுதிகளும் இந்த தளத்தில் உள்ளன. உங்கள் கருத்துகளையும் நீங்கள் இங்கே பதிவு செய்துகொள்ளலாம்.