சூரியன் எப். எம் சன் குழுமத்தினால் தமிழ்நாட்டில் இயக்கப்படும் பண்பலை வானொலி ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இக்குழுமம் ரெட் எப் எம் என்ற பெயரில் பண்பலை வானொலிச் சேவை வழங்கி வருகிறது.[1] இரண்டு வணிகப் பெயர்களிலும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரும் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக சன் குழுமம் விளங்குகிறது.

ரெட் எப்.எம் 93.5 அலைவரிசையில் இயங்கும் வானொலி ஆகும். புனே , மும்பை, டெல்லி, கொல்கத்தா, இந்தூர், போபால், பெங்களூர், மைசூர், மங்களூர், அலகாபாத்து, வாரணாசி போன்ற பல நகரங்களில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. முதலில் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபொழுது ஆங்கிலம் மற்றும் இந்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் முழு நேர இந்தி வானொலியாக மாற்றப்பட்டது. இந்த வானொலியின் 48 சதவித பங்குகளை சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் இந்தியா டுடே நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். அஸ்ட்ரோ, என்.டி. டீ .வீ ஆகியோரும் இதன் பங்குதாரர்கள் ஆவர். ஆகஸ்ட் 14, 2009 ஆம் ஆண்டு சூரியன் எப். எம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு , பின் ரெட் எப்.எம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 38 நகரங்களில் ஒலிபரப்பப்படுகிறது. இருந்தும் தமிழகத்தில் மட்டும் சூரியன் எப். எம் என்ற பெயரிலேயே இன்னும் ஒலிபரப்பு செய்யப்படுகின்றது. தமிழகத்தில் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 93.9 மெகாஹெர்ட்சு மற்றும் ஈரோடு மாவடத்தில் 91.9 மெகாஹெர்ட்சு அலைவரிசையில் கிடைக்கும்.

Suryan FM is an FM radio channel owned by Indian media conglomerate Sun Group. The channel has 10 broadcasting stations in Tamil Nadu and now officially called as Red Fm 93.5.