ரேடியோ மிர்ச்சி (Radio Mirchi) இந்தியா முழுமையும் பரந்துள்ள ஓர் தனியார் பண்பலை வானொலி நிலையங்களின் பிணையமாகும். டைம்சு குழுமத்தின் துணைநிறுவனமான என்டர்டெய்ன்மென்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட்டிற்கு உரிமையானது.

“மிர்ச்சி” என்ற இந்திச் சொல்லிற்கு மிளகாய் என்று பொருள். இந்த பண்பலை வானொலியின் அடையாள வசனமாக உள்ள “இது செம ஹாட் மச்சி”யிலுள்ள ஹாட் என்ற ஆங்கிலச் சொல் “காரமான” என்பதைக் குறிக்கும்.