குறும்படம் என்பது, முழுநீளத் திரைப்படமாகக் கருதுவதற்குப் போதிய நீளம் இல்லாத திரைப்படங்களைக் குறிக்கும். நன்றி தெரிவிப்புப் பகுதி உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கி 40 நிமிடங்கள் அல்லது அதற்குக் குறைவாக ஓடக்கூடிய திரைப்படமே குறும்படம் எனத் திரைப்படக் கலைகள் அறிவியல்கள் கழகம் (Academy of Motion Picture Arts and Sciences) வரைவிலக்கணம் தருகின்றது.