• தாமினி லிங்கம் posted an update 5 months, 3 weeks ago

  செய்தி!சும்மாவே எங்கட யாழ்ப்பாண சனம் படம் காட்டும். இப்ப ஒரு மணித்தியாலத்தில சென்னையில நிக்கலாமாம். எங்கட ஆட்கள் காட்டப்போற பயாஸ்கோப் படத்தை நினைச்சால் இப்பவே கண்ணைக்கட்டுதே😎

  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்கால சம்பவங்கள்!

  திருமணங்கள், பதிவுத் திருமணங்கள் மட்டுமில்லாமல் பொம்பிளை பார்த்தல் வடபழனியில் நடக்கும்.

  யாழ்ப்பாணத்தில் தீபாவளி ரிலீஸ் படத்திற்கு
  முதல் காட்சி ரிக்கெட் இல்லையா? அப்ப அடுத்து சென்னை சத்தியம்தான்.

  கல்யாண வீட்டு மாப்பிள்ளை, பொம்பிளை மாலை ஓடர் ரெடி. மல்லிகைப்பூ சரம், கொண்டை மாலையும் சேர்த்துத்தான்.

  சாமத்திய வீட்டுக்கு சீலை எடுக்க ரவுணுக்கு (சென்னை😎) போறம்.

  இண்டைக்கு ஆடிச் செவ்வாய் எல்லோ? கோயிலுக்கு போறம். என்ன தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கோ? இல்லை சென்னை அக்ஷ்டலட்சுமி கோயிலுக்கு.

  அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே. இதில எங்கட புலம்பெயர் (வளம்சேர்) சமூகத்தையும் சேர்த்தா? FB_IMG_1571312609353