துணிவாக தீ அணைக்கும் ரோபோ

Octavia robot aids firefighters in times of crisis

தீயினால் விபத்திற்குள்ளாகும் பகுதிகள் தற்போது மனிதர்களின் நேரடியான நடவடிக்கைகள் மூலமே கட்டுப்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு செயற்படும் போது மனிதனிற்கு ஏற்படும் தீங்குகளை தடுக்கும் பொருட்டும், துணிவாகவும் விரைவாகவும் தீயை அணைக்கும் பொருட்டும் நவீன ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயர் திறனுடன் வரும் புதிய விண்டோஸ்-8 இயங்குதளம்

Windows 8 Microsoft Operating Systems

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை தயாரிப்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த புதிய இயங்கு தளம் மைக்ரோசாப் நிறுவனத்திற்கு இன்னும் பெருமை சேர்க்கும் என நம்பப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த இயங்கு தளம் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

அதாவது இந்த விண்டோஸ் 8 உயர்ந்த ரிசலூசன் கொண்ட டேப்லெட்டுகளை சப்போர்ட் செய்யும். அதனால் இந்த இயங்கு தளம் மூலம் மேம்பட்ட இமேஜ் ரிசலூசன் கொண்ட டேப்லெட்டுகள் இந்த புதிய இயங்கு தளத்தில் மிக அழகாக இயங்கும்.

பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் விமானம்

Testing a dream: An in-depth look at Boeing 787 flight test

பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானமானது தனது கன்னிப் பயணத்தை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள நரிடா விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை ஆரம்பித்தது.

இந்த போயிங் ட்றீம்லைனர் விமானமானது நிறை குறைந்தது என்பதால் ஏனைய விமானங்களை விட எரிபொருன் பயனுறுதிப்பாடுமிக்கதாகும்.

பெரிய ஜன்னல் கண்ணாடிகளையும் அகலமான ஆசனங்களையும் கொண்ட இந்த விமானம் ஏனைய விமானங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே வேகமாகச் செலுத்தக்கூ​டிய மின்சார BiCycle

Specialized Turbo - Fast

சாதாரண பைசைக்கிள்களை விடவும் வேகமாக செலுத்தக்கூடிய மின்சார பைசிக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Turbo e-bike அழைக்கப்படும் குறித்த பைசைக்கிளானது மணிக்கு 28 மைல்கள் வேகத்தில் செலுத்தக்கூடியது ஆகும்.
இந்த பைசைக்கிளில் இணைக்கப்பட்டுள்ள விசேட மோட்டாரின் உதவியுடனேயே அதிக வேகத்தில் செல்ல முடிவதாகவும் மேலும் மூன்று வருடங்களின் பின்னர் மோட்டாரானது 250 வாற் மோட்டாரால் பிரதியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவுள்ள இந்த பைசைக்கிள்கள் ஒப்பீட்டளவில் எடை குறைவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிதைந்த முகத்திற்கு பதில் புதிய முகம்: அமெரிக்காவில் சாதனை !

The world's most extensive face transplant: Richard Norris, University of Maryla

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கி குண்டு விபத்தில் பாதிக்கப்பட்டு முகம் சிதைந்த விர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு தற்பொழுது அறுவைசிகிச்சை மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது. 15 ஆண்டுகளாக தன்னுடைய முகத்தை வெளியில் காட்டவே பயந்த அந்த இளைஞர் தற்போது தனது புதிய முகத்தைக் கண்டு மகிழ்சியடைந்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தின் அரிய ஒளிப்படங்கள் வெளியீடு

Mars Rover Spirit's Entire Journey on Mars - Time Lapse

மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்(Mars Rover Spirit) என்ற விண்கலம் மூன்று மாதம் 27 நாட்களாக செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஏறத்தாழ 3500 ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 2004 ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய இந்த பயணம் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இந்த விண்கலத்தில் 4.8 மைல் தூர பயணத்தில் எண்ணற்ற பாறைகள் மற்றும் வெளிர் நிறமுடைய மணல் போன்றவற்றை ஆய்வு செய்து படங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது தான் இந்த விண்கலத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.

சாலைகளை துப்புரவு செய்ய வினோத முறையை கையாளும் சீனர்கள்

Enterfun.net - Road Sweeper made in China

வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான சீனா தனது போக்குவரத்து சாலைகளை துப்புரவு செய்வதற்கு வினோமான முறையில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் ஒன்றை பயன்படுத்துகின்றர்.
வான் ஒன்றின் பின்னால் இணைக்கப்பட்டு இயக்கப்படும் இந்த இயந்திரமானது சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதோடு, மிகவும் துல்லியமாக சாலைகளை துப்புரவு செய்கின்றது. எனினும் இவ்வாறு துப்புரவு செய்யும் போது யாரும் சாலையில் நிம்மதியாக செல்ல முடியாது.

வகை: 

Pages