விவசாயி கண்டுபிடித்த காற்றின் உதவியுடன் இயங்கும் இலத்திரனிய​ல் கார்

'Wind-Powered' Electric Car Built By Chinese Peasant

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காற்றின் மூலம் இயங்கக்கூடிய இலத்திரனியல் காரைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
55 வயதை உடைய தான்ங் செயின்பிங் என்ற குறித்த விவசாயி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இக்காரின் மூலம் எரிபொருட் செலவு குறைக்கப்படுவதுடன் சுற்றுச் சூழலிற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் போல் இரு கால்களில் நடக்கும் கரடிகள்.

walking-bears-in-china

சீனாவில் கறுப்புக் கரடிகளை வைத்து பல விதமாக பணம் சம்பாதிக்கின்றனர். கிழக்கு சீனாவில் Qingdao எனும் நகரில் உள்ள circus இல் இரு கறுப்புக் கரடிகளுக்கு மனிதர்கள் போல் நடக்கவும், இரண்டு கால்களில் பாய்ந்து ஓடவும் பயிற்றி அளிக்கப்படுகின்றது...

சீன பிரதமரின் இந்திய விஜயத்தை எதிர்த்து டெல்லி பாராளுமன்ற முன்றலில் தீக்குளிப்பு!

Tibetan sets himself on fire over Hu's visit to India

சீன பிரதமரின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இந்திய பாராளுமன்ற முன்றலில் திபெத்திய இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இவ்வார இறுதியில் சீன பிரதமர் ஹூ ஜிண்டா இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் திபெத் மீது சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்தும், சீன பிரதமரின் வருகை எதிர்த்தும் நேற்று டெல்லி பாராளுமன்றம் முன்பாக பல நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஜேஸி எனும் குறித்த இளைஞர் தன் மீது தீயை பற்றவைத்துக்கொண்டுள்ளார்.

கழிவறைக் குழாயை அடிக்கடி திறந்ததால் சீன பாட்டியால் 98 டன் தண்ணீர் வேஸ்ட்

Woman wastes 98 tons of water flushing toilet

சீனாவின் லயோனிங் மாகாணம் டாலியன் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிராமத்தில் இருக்கும் அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். மூதாட்டியின் பெயர்சாங் (68). கடந்த 3 மாதமாக மகன் வீட்டில்தான் இருக்கிறார். அவர் 5 நிமிடத்துக்கு ஒரு முறை கழிவறைக்கு போய் வந்தது மகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் இதுபற்றி விசாரித்தார். டாய்லெட்டுல ஒரு பெட்டி (ஃபிளஷ் டேங்க்) இருக்கிறதே. அதன் மேல் இருக்கும் சுவிட்சை அழுத்தினால், குபுக்கென்று தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்கிறது.

உலக சாதனையை முறியடித்த சீனப் பாலம்!

Chinese build record breaking bridge

இந்தப் பாலம் நிச்சயம் சீனர்களின் உலக சாதனை தான். மோட்டர் சைக்கிளில் செல்வோர்கள் கீழே பார்த்தால் நிச்சயம் தலை சுத்திக் கீழே விழுவார்கள்.
கீழே இருந்து 1,102 அடி உயரங்களைக் கொண்டது இந்தப் பாலம். Aizhai என்று பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்தப் பாலம் தான் தற்போது உலகின் நீளமான மற்றும் உயரமான பாலம் ஆகும்.

2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பாலத்தின் வேலைகள் கடந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வந்தன.

Pages