நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்
‘விண்ணை முட்டும்’ அளவுக்கு உயரமான கட்டிடம் பார்த்திருக்கிறோம். மெக்சிகோவில் ‘பாதாளத்தை முட்டும்’ அளவுக்கு அண்டர்கிரவுண்டில் சுமார் ஆயிரம் அடி ஆழத்துக்கு பிரமாண்ட கட்டிடம் கட்ட இருக்கிறார்கள். வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மத்திய பகுதியில் 65 மாடி கட்டிடம் ஒன்று வர இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால்.. மொத்த கட்டிடமும் அண்டர்கிரவுண்டில் அமையப் போகிறது.
நாணய வடிவில் ஒரு அதிசய கட்டிடம்
தொழில்நுட்ப வளர்ச்சியையும், கட்டிடக்கலையின் வளர்ச்சியையும் கலந்து படைக்கப்படும் பிரம்மாண்டங்களுக்கு இன்று எல்லையே இல்லை என்று சொல்லுமளவிற்கு மனிதனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இதை பறைசாற்றும்விதமாக சீனாவின் குவாங்கோ பகுதியில் பிறிதொரு பிரமாண்டமான கட்டிடம் அமைக்கப்படுகின்றது. லக்கி கொயின் (lucky coin) என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தினை ஒரு நாணயத்தின் வடிவில் நிர்மாணித்து வருகின்றனர்.
- Read more about நாணய வடிவில் ஒரு அதிசய கட்டிடம்
- Log in or register to post comments
15 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 30 மாடி ஹோட்டல்! சாதித்த சீனா
இதுவும் ஒரு வரலாற்று சாதனை தான். சாதித்தது வேறு யாரும் அல்ல. சீனா தான். உலகின் அடுத்த வல்லரசு நான் தான் என சொல்லாமல் சொல்லி வருகிறது. ஒவ்வொரு செயல்பாட்டிலும் புதுமையும் அறிவையும் புகுத்தி வருவதில் வெற்றி கண்டு
வருகின்றது.
30 மாடிகள் கொண்ட ஒரு ஹோட்டலை 15 நாட்களில் கட்டி முடித்திருக்கிறார்கள்.
சீனாவில் உள்ள Changsha மாகாணத்திலுள்ள inland நகரத்தில் அமைந்துள்ள ஆர்க் ஹோட்டலே இவ்வாறு மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.








