ஆற்றங்கரைகளில் 5 ஆயிரம் பனை விதை, 50 அரச மரக்கன்றுகள் நடவு செய்த நாம் தமிழர் இளைஞர்கள்

ஆற்றங்கரைகளில் 5 ஆயிரம் பனை விதை, 50 அரச மரக்கன்றுகள் நடவு செய்த நாம் தமிழர் இளைஞர்கள்

கீரமங்கலம், நகரம் ஆகிய பகுதிகளில் அம்புலி ஆற்றங்கரை ஓரங்களில் 5 ஆயிரம் பனை விதைகளும், 50 அரசங்கன்றுகளையும் இளைஞர்கள், நாம் தமிழர் கட்சியினர் நடவு செய்தனர். நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் பனை மரங்களை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். ஆனால் குளம், ஏரி போன்று பல இடங்களிலும் இருந்த பனை மரங்கள் விறகுக்காக வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பனை மரங்களை […]

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு இன்று (10) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவொன்றை மையப்படுத்தி இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துச் செய்தியொன்று பேஸ்புக்கில் பதியப்பட்டுள்ளது. தினேஸ் குமார் […]

பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு

பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு

நேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மலையேற்றக் குழுவினரும், நேபாளைத்தை சேர்ந்த நான்கு வழிகாட்டிகளும் சுமார் 23,600 அடி உயரத்திலுள்ள குர்ஜா சிகரத்திலுள்ள முகாமில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் நேபாளத்தில் நடந்த மோசமான மலையேறும் விபத்தாக இது கருதப்படுகிறது. பனிப்புயலின் தீவிரம் குறைந்த பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்த மலையேறும் […]

பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து டெலிவரி செய்த இளைஞருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை

பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து டெலிவரி செய்த இளைஞருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை

துருக்கியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பீட்சாவில், விநியோகம் செய்த இளைஞர் எச்சில் உமிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை தணடனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எஷ்கிஸெகிர் என்ற இடத்தை சேர்ந்த புராக் என்ற இளைஞர் பீட்சா கடையில் வேலைபார்த்து வந்தார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா விநியோகிக்கும் முன் அதில் எச்சில் உமிழ்ந்த காட்சி சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து புராக் மீதான வலக்கை விசாரித்த நீதிபதி, அவரின் செயல் மனித தன்மையற்றது […]

அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதா?

அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதா?

ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகளை, சர்வர் சர்க்யூட் போர்டுகளில் பொருத்தி தரவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ப்ளூம்பர்க் கூறுவது முற்றிலும் தவறானது என்று அதனை ஆப்பிள், அமேசான் மற்றும் சூப்பர் மைக்ரோ நிறுவனங்கள் மறுத்துள்ளன. இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் ஜோர்டன் ராபர்ட்சன் மற்றும் மைக்கெல் ரிலே ஆகியோர் ஓர் ஆண்டு முழுவதும் விசாரணை […]

ஆசிப் பிரியாணி கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டு

ஆசிப் பிரியாணி கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டு

தரமற்ற முறையில், காலாவதியான பொருட்களை வைத்து பிரியாணி தயாரித்த ஆசிப் பிரியாணி கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை கிண்டியில் ஆசிப் பிரியாணி கடையின் உணவு தயாரிக்கும் சமையற்கூடம் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தின் பிரியாணி உட்பட பிற உணவுப் பொருட்கள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வதாகவும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன. தரமற்ற முறையில், காலாவதியான பொருட்களை வைத்து பிரியாணி தயாரித்த […]